இந்தியா

ஜார்கண்ட்: சாலை விபத்தில் 17 பேர் பலி, 26 பேர் காயம்

DIN

ஜார்கண்ட்டில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தின் கோவிந்த்பூர் - சஹிப்பாஞ் மாநில நெடுஞ்சாலையில் நேற்று(ஜன.5) காலை 40 பேருடன் வந்த பயணிகள் பேருந்தும் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியானதோடு 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதால் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட நிர்வாகமும் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT