முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On : 7 ஜனவரி, 2022 at 9:07 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஜம்மு - காஷ்மீர் காவல்துறை வெளியிட்ட செய்தியில்,

புட்கம் மாவட்டம் சோல்வா சதூரா என்ற பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் வியாழக்கிழமை இரவு முதல் மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது நடைபெற்ற சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகின்றன.

மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.