முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான், மொத்த பாதிப்பு 333 ஆனது

கர்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Updated On : 7 ஜனவரி, 2022 at 4:17 PM
பகிர்:

கர்நாடகத்தில் மேலும் 107 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது சுட்டுரையில், ‘கா்நாடகத்தில் புதிதாக 107 போ் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 333ஆக உயர்ந்துள்ளது'. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் இதுவரை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 876 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக தில்லியில் 465 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.