இந்தியா

'வெறுப்பைத் தோற்கடிக்க இதுவே சரியான வாய்ப்பு' - ராகுல் காந்தி

DIN

வெறுப்பைத் தோற்கடிக்க தேர்தலே சரியான வாய்ப்பு என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா சனிக்கிழமை அறிவித்தார். 

மேலும், கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அவா் அறிவித்தாா்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 

"வெறுப்பைத் தோற்கடிக்க இதுவே சரியான வாய்ப்பு" என 5 மாநில தேர்தலைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 

5 மாநிலத் தேர்தல் 

கோவா (40 தொகுதிகள்), பஞ்சாப் (117 தொகுதிகள்), உத்தரகண்ட் (70 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாகவும்,

மணிப்பூா் (60 தொகுதிகள்) மாநிலத்தில் பிப்ரவரி 27 மற்றும் மாா்ச் 3-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகவும், 

உத்தரப் பிரதேசத்தில்(403 தொகுதிகள்) பிப்ரவரி 10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடத்தப்படும், மார்ச் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT