கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடக முதல்வருக்கு கரோனா

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"லேசான அறிகுறிகளுடன் எனக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது. நான் வீட்டுத் தனிமையில் உள்ளேன். என்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,698 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,148 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய (திங்கள்கிழமை) நிலவரப்படி 60,148 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அஜய் பட் ஆகியோருக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT