இப்படியும் ஒரு குற்றமா? கேரள காவல்துறையினர் கலக்கம் 
இந்தியா

இப்படியும் ஒரு குற்றமா? கேரள காவல்துறையினர் கலக்கம்

வாழ்க்கைத் துணையை மாற்றிக் கொள்ளும் கும்பல் குறித்த அதிர்ச்சித் தகவல்கள், பெண் ஒருவர் தனது கணவர் மீது அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ENS


வாழ்க்கைத் துணையை மாற்றிக் கொள்ளும் கும்பல் குறித்த அதிர்ச்சித் தகவல்கள், பெண் ஒருவர் தனது கணவர் மீது அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், கேரள காவல்துறையினர் பாலியல் உறவுக்காக, தங்களது வாழ்க்கைத் துணையை மாற்றிக் கொள்ளும் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, கோட்டயம் மாவட்டம் கருகாசல் காவல்நிலையத்தில், சங்கனசேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைத் துணையை மாற்றிக் கொள்ளும் கும்பலில் அங்கம் வகிக்கும் தனது கணவர், தன்னை வேறொருவருடன் வாழுமாறு வற்புறுத்துவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், அப்பெண்ணின் கணவரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு, இந்த கும்பல் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இன்னும் ஒரு சில நாள்களில் ஏராளமானோர் கைது செய்யப்படுவார்கள் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

இந்த கும்பலில் சுமார் 1000 பேர் வரை இருப்பதாகவும், இவர்கள் தங்களுக்குள் வாழ்க்கைத் துணை மாற்றிக் கொள்வதாகவும், இவர்கள் பெரும்பாலானோர் கேரளத்தில் மூன்று மாவட்டங்களை சேர்ந்தவர்களாகவே இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுபோன்றதொரு முறைகேடு கடந்த 2019ஆம் ஆண்டிலும் காயன்குளத்தில் நடந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT