முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 34 ஆயிரம் பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 34,424 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 34,424 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 34,424 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

34 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதுதவிர 18,967 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

இதுவரை மொத்தம் 66,21,070 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,281 ஆக உயர்ந்துள்ளது. இதில் 499 பேர் குணமடைந்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.