தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் (கோப்புப்படம்) 
இந்தியா

கோவா தேர்தலில் போட்டியிட காங்., திரிணமூலுடன் கூட்டணி பேச்சு: சரத் பவார்

கோவா தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

கோவா தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10 முதல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரங்களை அனைத்து கட்சிகளும் தொடங்கியுள்ளன.

கோவா பேரவையை பொறுத்தவரை ஆளும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், திரிணமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகளின் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் கூறுகையில்,

“கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் திரிணமூல் மற்றும் காங்கிரஸுடன் ஈடுபட்டு வருகிறது.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வகுப்புவாத பிரிவினை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு உ.பி. மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

உத்தரப் பிரதேச மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். கண்டிப்பாக மாற்றத்தை பார்க்க முடியும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு தினம்: பிப்.1-ல் மதுக் கடைகள் அடைப்பு!

மருத்துவமனைக் கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.27 லட்சம் திருட்டு!

வைகை அணை பகுதிகளில் நாளை மின்தடை!

முதியோா் ஓய்வூதியத் திட்டம்: பிப்.4-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

SCROLL FOR NEXT