தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு ஆன்லைன் மூலம் யோகா வகுப்புகள் எடுக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தில்லி முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனாவால் நோய்த் தொற்று வேகமாக பரவி வருகின்றன. நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் தனியார் அலுவலகங்கள், உணவகங்களை மூட உத்தரவு
இந்நிலையில் தில்லி முதல்வர் இன்று வெளியிட்ட செய்தியில்,
கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். யோகா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அனைவருக்கும் வகுப்பிற்கான இணைய இணைப்புகள் இன்று அனுப்பப்படும். நாளைமுதல் வகுப்புகள் ஆரம்பமாகும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.