இந்தியா

கரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இந்தியா: அபாயத்தை எட்டுகிறதா?

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.

DIN


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்காவில் 6.15 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 3.58 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வகை தொற்று பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து தடுப்பூசி போடும் பணிகளை ஊக்குவித்து வருகின்றன. 

இந்நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான மக்கள் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 4.26 கோடி மக்கள் குணமடைந்தனர். அதேபோன்று இந்தியாவில் 3.46 கோடி மக்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் 863,896 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் 484,359 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 1.9 கோடி மக்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 9.6 லட்சம் மக்கள் கரோனாவுக்கு வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் விஜய் சேதுபதி?

“அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என திமிரெடுத்து பேசுகிறார்” ஆளுரைச் சாடிய முதல்வர்!

TVK விஜய் வீட்டில் செங்கோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 26.11.25

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் ராகுல் சந்திப்பு!

முன்னணி பான் மசாலா குடும்பத்தின் மருமகள் தற்கொலை!

SCROLL FOR NEXT