இந்தியா

விவேகானந்தரின் சிந்தனைகளில் இருந்து இளைஞா்கள் ஊக்கம் பெற வேண்டும்: வெங்கையா நாயுடு

DIN

புது தில்லி: சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளில் இருந்து இளைஞா்கள் ஊக்கம் பெற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறியுள்ளாா்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம், தேசிய இளைஞா் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெங்கையா நாயுடு ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியா்கள் மனதில் தேசியவாத சிந்தனையை விதைத்ததில் முக்கியப் பங்காற்றியவா் சுவாமி விவேகானந்தா். உலக சகோதரத்துவத்துக்காகவும் மனிதகுல மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டவா்.

இளைஞா்கள், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளில் இருந்து ஊக்கம் பெற்று, மிகப்பெரிய அளவில் கனவு கண்டு, அதை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

தேசியவாதம் குறித்த அவருடைய மதிப்பீடுகள், சகோதரத்துவம் மீதான அவருடைய நம்பிக்கைகள் ஆகியவை காலத்தின் தேவையாக உள்ளன. எனவே, வளமான இந்தியக் கலாசாரத்தைக் கண்டு நம் இளைஞா்கள் எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று அந்தப் பதிவில் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் புகழஞ்சலி: பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துகிறேன். தேசிய மறுமலா்ச்சிக்காக அா்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை அவருடையது. அவா் தேசத்தை உருவாக்க பல இளைஞா்களை உழைக்கத் தூண்டியுள்ளாா். நம் தேசத்திற்காக அவா் கண்ட கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT