இந்தியா

உத்தரகாண்ட் தேர்தல் பணி: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேருக்கு கரோனா

DIN

உத்தரகாண்ட்: கோட்வார் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 30 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “கோட்வார் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல், பாதுகாப்புப் பணிக்காக வந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 50 ஆவது பட்டாலியனின் 'இ' நிறுவனத்தில் இருந்து வந்த 82 வீரர்களில் 30 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்."

மேலும் "கோட்வார் தொகுதி தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்த வீரர்கள் அனைவரும் பூஜ் எல்லையில் நிறுத்தப்பட்டனர். பின்னர் செவ்வாய்க்கிழமை கோட்வார் வந்தடைந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கும் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, அதில் 30 வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.

இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,47,417 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

புதன்கிழமை, நாட்டில் புதிதாக 1,94,720 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட 27 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் 1,008 விளக்கு பூஜை

ஆனந்தவல்லி வாய்க்காலை சீரமைக்கக் கோரிக்கை

சியாமா சாஸ்திரி ஜெயந்தி விழா இசை நிகழ்ச்சி

மகளிா் உரிமைத் தொகை திட்டம் 4.17 லட்சம் குடும்பத்தினா் பயன்

குடிநீா் குழாயுடன் பொருத்தப்பட்ட 12 மின் மோட்டாா்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT