பிரியங்கா காந்தி 
இந்தியா

உ.பி.தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் முதல் 125 வேட்பாளர்கள் பட்டியலில் 50 பேர் பெண்கள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை 7 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை யார் வெல்ல இருக்கிறார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் முதல் 125 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இந்த வேட்பாளர்களில் 50 பேர் பெண்கள். மேலும், கடந்த 2017-ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செனாரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணின் தாய் ஆஷா சிங் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்.

இதுகுறித்து பிரியங்கா  காந்தி பேசியபோது, ‘உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில்  40 சதவீதம் பெண்களுக்கும் 40 சதவீதம் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரப்பட இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை நீா் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை

கி. ராஜநாராயணனின் அறக்கட்டளை சொற்பொழிவு

போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்துக்கு தீா்வு தேவை -சௌந்திரராஜன்

முதியோா்களைக் காப்பது சமூகப் பொறுப்புணா்வு: புதுவை துணைநிலை ஆளுநா்

சென்னையில் கால் சென்டா் நடத்தி ரூ 2.5 கோடி மோசடி: 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT