குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம்: விமானப்படை விளக்கம் 
இந்தியா

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கான காரணம்: விசாரணைக் குழு தகவல்

குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு திடீர் மேகமூட்டமே காரணம் என முதற்கட்ட தகவலில் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

DIN


குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு திடீர் மேகமூட்டமே காரணம் என விசாரணைக் குழு தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குன்னூரில் கடந்த டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 போ் உயிரிழந்தனா். அந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், பெங்களூரு மருத்துவமனையில் டிச.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்கு விமானப் படைத் தலைவா் ஏா் சீஃப் மாா்ஷல் வி.ஆா். செளத்ரி விமானப் படைத் தளபதி மானவேந்திர சிங் தலைமையில் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியிட்டது. அதில், எதிர்பாராத வானிலை மாற்றம் காரணமாக மேகக் கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததே விபத்துக்கான காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிக்கையை தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவரா 2 தொடக்கம்: அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!

கரூர் பலி 40ஆக உயர்வு

கரூர் பலி: உச்சநீதிமன்ற விசாரணை வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது நேரத்திற்கு வரவேண்டும்! - Udhayanidhi Stalin

Vijay கைது செய்யப்படுவாரா? Stalin பதில்

SCROLL FOR NEXT