முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 2.68 லட்சம் பேருக்கு கரோனா; 6,041 ஒமைக்ரான்

நாட்டில் நேற்று ஒரே நாளில் 2.68 லட்சம் பேர் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது நேற்று முன்தினத்தை விடவும் 4,631 கூடுதலாகும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
நாட்டில் புதிதாக 2.68 லட்சம் பேருக்கு கரோனா; 6,041 ஒமைக்ரான்
பகிர்:


நாட்டில் நேற்று ஒரே நாளில் 2.68 லட்சம் பேர் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது நேற்று முன்தினத்தை விடவும் 4,631 கூடுதலாகும்.

இன்று காலையுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணிநேரத்தில் 2,68,833 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 402 பேர் பலியாகினர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,85,752 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து நேற்று 1,22,684 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 14,17,820 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிக்கப்படும் விகிதம் 16.66 சதவிகிதமாக உள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,041-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரமும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானும் ஒமைக்ரானால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் 1,56,02,51,117 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.