முகப்பு
இந்தியா

பிகாரில் தொடரும் சோகம்: கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி

பிகாரின் நாலந்தா பகுதியில் விஷமுள்ள மதுவை அருந்தி 5 பேர் உயிரிழந்ததாக பலியானவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
கோப்புப்படம்
பகிர்:

பிகாரின் நாலந்தா பகுதியில் விஷமுள்ள மதுவை குடித்ததால் 5 பேர் உயிரிழந்ததாக பலியானவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது.

முக்கியமாக கடந்த நவம்பர் மாதம் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், தற்போது நாலந்தா மாவட்டத்தில் மது கிடைக்காததால்  கள்ளசாராயத்தை அருந்தி 5 பேர் பலியானாதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், பிகார் மாநிலத்தில் மதுவால் உயிரிழக்கும் சோகம் அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →