இந்தியா

புதிய தொழில் நிறுவனங்களே இந்தியாவின் முதுகெலும்பு: பிரதமர் மோடி

DIN

புதிய தொழில்முனைவோர்களே, புதிய இந்தியாவின் முதுகெலும்பு என்று தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதிய தொழில்முனைவோர்களே, புதிய இந்தியாவின் முதுகெலும்பாக மாறவிருக்கிறார்கள். எப்போது இந்தியா தனது 100வது சுதந்திரநாளைக் கொண்டாடுகிறதோ, அப்போது, நாட்டில் புதிய தொழில்நிறுவனங்களே மிக முக்கிய பங்கு வகிப்பார்கள். நாட்டில் புதியவற்றை அறிமுகம் செய்பவர்களே, உலகளவில் நாடு பெருமைபெறக் காரணமாக இருக்கிறார்கள் என்றும் பிரதமர் கூறினார்.

காணொலி காட்சி மூலம் புதிய தொழில்முனைவோரிடையே கலந்துரையாடிய மோடி, வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள் குறித்தும் விவாதித்தார்.

இதில், விண்வெளி, தொழில்துறை 4.0, ஃபின்டெக், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டு பிரதமருடன் கலந்துரையாடினர்.

வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளூரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற மையப்பொருள்கள் அடிப்படையில் 150க்கும் அதிகமான தொழில்முனைவோர் ஆறு பணிக்குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையப்பொருள்கள் மீது ஒவ்வொரு குழுவினரும் பிரதமர் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT