தில்லி: குடியரசு தின அணிவகுப்பைக் காண 24,000 பேருக்கு மட்டும் அனுமதி
தில்லியில் இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண 24,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண 24,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் 73-வது குடியரசு தினம் வருகிற ஜன.26 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் காண இந்தமுறை 24,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளனர். மேலும், தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அணிவகுப்பைக் காண அனுமதிக்கப்படுவார்கள்.
Advertisement
இதில் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என 19,000 பேர் அரசு சார்பில் அழைக்கபட்டுள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு 1.25 லட்சம் பேரும், 2021-ல் 25,000 பேரும் குடியரசு தின அணிவகுப்பைக் காண அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.