இந்தியா

உ.பி.தேர்தல்: முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டி

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தர்காண்டு, பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட 125 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது, பாஜக முதல்கட்டமாக 58 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

முன்னதாக, ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மௌரியா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வினய் சாக்யா, பகவதி சாகர் ஆகியோர் நேற்று(ஜன.14) அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜவாதி கட்சியில் இணைந்ததால் உத்தரப் பிரதேசத் தேர்தல் பரபரப்பை அடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT