இந்தியா

கரோனாவைக் கட்டுப்படுத்த கர்நாடகம் எடுத்த அதிரடி முடிவு

DIN


பெங்களூரு: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசர மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும்  என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை அல்லது இரண்டு வாரத்துக்குப் பிறகே மருத்துவமனைக்கு பிற நோயாளிகள் வரலாம் என்றும், அதுவரையிலும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டியோர் ஆன்லைன் மூலம் மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள் மட்டும் மருத்துவமனைகளுக்கு பல்நோக்கு மருத்துவமனைகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு வரலாம் என்று கர்நாடக மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தவிர, புறநோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டியவர்கள், பல் தொடர்பான சிகிச்சை பெற வேண்டியவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே நடவடிக்கையை தனியார் மருத்துவமனைகளும் பின்பற்றுமாறும், மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் இந்த கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT