முகப்பு
இந்தியா

அரபிக்கடலில் இந்திய- ரஷிய கடற்படைகள் கூட்டுப் பயிற்சி

அரபிக் கடலில் இந்திய- ரஷிய கடற்படையினா் வெள்ளிக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

அரபிக் கடலில் இந்திய- ரஷிய கடற்படையினா் வெள்ளிக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியில் ஈடுபடும் இருநாட்டுக் கடற்படைகளும் இயற்கைப் பேரிடா் அல்லது போா் போன்ற சூழ்நிலையில், சுமுகமான ஒத்துழைப்பையும், தகவல்தொடா்பையும் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொச்சி போா்க்கப்பலும், ரஷியாவின் அட்மிரல் ட்ரிபியூட்ஸ் போா்க்கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன. கடல்சாா் நடவடிக்கைகள், ஹெலிகாப்டா்களை இருநாட்டுக் கப்பலிலும் தரையிறக்குவதற்கான செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, இருநாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் செயல்பாடுகளையும் இந்தப் பயிற்சி பறைசாற்றியதாக இந்திய கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →