முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 31 ஆயிரம் பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 31,111 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 31,111 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வகை கரோனா பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 31,111 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 29,092 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 68,29,992 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,67,334 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான்:

புதிதாக 122 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,860 பேர் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.