கோப்புப்படம் 
இந்தியா

தாணே: விசைத்தறி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரில் உள்ள விசைத்தறி தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

காதிபார் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இன்று அதிகாலை சரியாக 1.30  மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள விசைத்தறி அலகு முழுவதும் தீ பரவியதால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. 

இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, 5 மணி நேர போரட்டத்திற்கு பின்பு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

விசைத்தறி மற்றும் கைத்தறி போன்ற ஜவுளித் தொழிலுக்கு பிவாண்டி பெயர்  பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிர்வாகிகள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்!

பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறதா தவெக?

கரூர் பலி: வதந்தி பரப்பிய மூவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை! - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!

SCROLL FOR NEXT