தேர்தல் ஆணையம் 
இந்தியா

பஞ்சாப் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? தேர்தல் ஆணையம் ஆலோசனை

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை மாற்றுத் தேதியில் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை மாற்றுத் தேதியில் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன. இதில், பஞ்சாப் மாநிலத்திற்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பிப்ரவரி 16ஆம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மக்கள் வாராணசிக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம் என்பதால் வேறு தேதியில் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.

இதையடுத்து, கட்சிகளின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி நெருங்குவதால் ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

14 குழந்தைகள் இறப்பு: ம.பி.யில் மருத்துவா் கைது! இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு!

ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு குழாய் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

‘கோல்ட்ரிஃப்’ மருந்து உற்பத்தி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

SCROLL FOR NEXT