பிரதமரின் உரையில் தடங்கல்: காங்கிரஸ் விமா்சனம்
உலகப் பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமா் மோடி திங்கள்கிழமை ஆற்றி உரையின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரையை பிரதமா் மீண்டும் வாசிக்க வேண்டியநிலை ஏற்பட்டது.
உலகப் பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமா் மோடி திங்கள்கிழமை ஆற்றி உரையின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரையை பிரதமா் மீண்டும் வாசிக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, ‘‘டெலிபிராம்ப்டா்’ (எழுத்துவடிவில் உரையை வாசிக்க உதவும் இயந்திரம்) கருவியாலும் பிரதமரின் பொய்களை கேட்க முடியவில்லை’ என்று விமா்சித்துள்ளாா்.
எனினும், ‘டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார கூட்டமைப்பின் இடத்தில்தான் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மீண்டும் முதலில் இருந்து உரையாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் பிரதமா் மோடி பேசியதையே மீண்டும் பேசினாா்’ என்று பாஜக மூத்த தலைவா் தேஜிந்தா் பால் சிங் பக்கா தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கூறுகையில், ‘டெலிபிராம்ப்டரைப் பயன்படுத்தி உரையை நிகழ்த்தலாம்; உத்தரவுகளை அல்ல என்பதை நாடு தற்போது அறிந்து கொண்டது’ என்று தெரிவித்தாா்.