இந்தியா

இதுவரை 50 லட்சம் பேருக்கு மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி

DIN

நாட்டில் இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசியின் மூன்றாவது தவணை செலுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

கரோனா தடுப்பூசி திட்டத்தில் மற்றொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. ஜனவரி 10-ஆம் தேதி முதல் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பல்வேறு உடல்நல பாதிப்புகள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் என இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது தவணை செலுத்தப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்தவா்கள் மூன்றாவது தவணையை விரைந்து செலுத்திக் கொள்ளவும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT