கோப்புப்படம் 
இந்தியா

போட்டிக்கு தயாராகும் முதல்வர்; களத்தில் குதிக்கும் அகிலேஷ் யாதவ்

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அரசியல் அழுத்தம் ஏற்பட்டது.

DIN

பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிட அகிலேஷ் யாதவ் முடிவு எடுத்துள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அனைத்து தொகுதிகளிலும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள அசம்கர் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ள அகிலேஷ், இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. இருப்பினும், இந்த முறை அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து தெரியவில்லை. 
 
சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிடவுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அரசியல் அழுத்தம் ஏற்பட்டது.

கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க கோரக்பூர் மடத்தின் தலைவராக உள்ள யோகி ஆதித்யநாத், கோரக்பூர் சாதர் தொகுதியில் களமிறங்கவுள்ளார். இந்த தொகுதியில் முதல்வரை களமிறக்கியதன் மூலம், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்ற பாஜக முயற்சிகளை எடுத்துவருகிறது.

இதற்கு மத்தியில், கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஏதேனும் ஒரு தொகுதியிலேயோ அல்லது மாநிலத்தின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற லக்னெள தொகுதியில் அகிலேஷ் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவிலிருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பல தலைவர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த நிலையில், அகிலேஷ் யாதவின் தம்பி மனைவி அபர்ணா பாஜகவில் இன்று இணைந்திருப்பது பேசுபொருளாக மாறியது. இந்த நிலையில், அகிலேஷ் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை வெற்றிபெற செய்த அகிலேஷ் யாதவ், பின்னர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT