இந்தியா

முடிவை எட்டாத கோவா கூட்டணி: காங். குறித்து சஞ்சய் ரெளத் விமர்சனம்

DIN

கோவா தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவை எட்டாத நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் குறித்து சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் புதன்கிழமை விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், கோவா பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப். 14இல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸின் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவசேனையில் சஞ்சய் ரெளத் இன்று செய்தியாளர்களிடன் பேசுகையில்,

நாங்கள் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. மகாராஷ்டிரத்தில் அமைத்தது போன்று காங்கிரஸுடன் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைய முயற்சித்து வருகிறோம்.

ஆனால், கோவாவில் தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையை பெற்றுவிட முடியும் என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT