தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்) 
இந்தியா

தில்லியில் தற்போதைக்கு தளர்வுகள் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர்

தில்லியில் தற்போதைக்கு கரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

தில்லியில் தற்போதைக்கு கரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா மூன்றாம் அலை பரவியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 11,684 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:

தில்லியில் கரோனா உறுதியாகும் விகிதம் 30 சதவீதத்திலிருந்து 22.5 ஆக குறைந்துள்ளது. ஆனால், இது குறைவான பாதிப்பு இல்லை. கட்டுப்பாடுகள் தற்போதைக்கு தளர்த்தப்படாது.

மொத்தம் 13,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மருத்துவமானையில் அனுமதி ஆகாததால் படுக்கைகள் தொடர்ந்து காலியாக உள்ளன. தில்லியில் தொடர்ந்து சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சேலம் மாவட்டச் செயலாளரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

ஜெய்ஸ்வால், கில் சதம்: 518 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய அணி!

அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால்.. திருமாவளவன் பேச்சு

அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: தொல்.திருமாவளவன்

முதல்முறையாக 10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை! - மு.க. ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT