இந்தியா

கோவா பாஜக வேட்பாளர்கள்: 4 பேர் மீது குற்றவியல் வழக்கு

DIN


கோவாவில் பாஜக அறிவித்துள்ள 34 பேர் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலில் 4 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான 34 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது.

பாஜக அறிவித்துள்ள 34 வேட்பாளர்களில் 4 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

மான்சரெட் தம்பதி:

பனாஜி தொகுதி எம்எல்ஏ அடானசியோ மான்சரேட் மீது, கடந்த 2016-இல் சிறுமி ஒருவரை விலைக்கு வாங்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றச் சம்பவம் நிகழ்ந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நேரத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்திருக்கிறார். பின்னர் பாஜகவில் இணைந்துள்ளார்.

அவரது மனைவி ஜெனிஃபர் மான்சரெட் முதல்வர் பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் தற்போது வருவாய்த் துறை அமைச்சராக உள்ளார். அவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2008-இல் பனாஜி காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெனிஃபரும் இருந்ததாக அவர் வழக்கு நிலுவையில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மான்சரெட் தம்பதிகள் மற்றும் 35 பேர் மீது சிபிஐ கடந்த 2014-இல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை ஜனவரி 21-ம் தேதி தொடங்குகிறது.

கோவிந்த் கௌடே:

சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் கலை மற்றும் கலாசார அமைச்சர் கோவிந்த் கௌடே மீதும் குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் சுயேச்சையாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011-இல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின்போது கலகத்தை உண்டாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோவிந்த் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் மீது பதியப்பட்ட மூன்று வழக்குகளில் இரண்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். மூன்றாவது வழக்கு குறித்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ரமேஷ் தாவாட்கர்:

முன்னாள் அமைச்சர் ரமேஷ் தாவாட்கருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிந்த் மீது பதியப்பட்டுள்ள அதே வழக்கில்தான் ரமேஷ் தாவாட்கரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT