முகப்பு
இந்தியா

பிகாரில் போலி மதுபானம் குடித்த 5 பேர் பலி

பிகாரில் போலி மதுபானம் குடித்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

பிகாரில் போலி மதுபானம் குடித்த 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிகாரின் சரன் மாவட்டத்தில் போலி மதுபானம் குடித்த 5 பேர் நேற்று பலியானார்கள். பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சரன் மாவட்ட ஆட்சியிர் ராஜேஷ் மீனா கூறுகையில், "மேகர் மற்றும் அம்னூர் பகுதிகளில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. 

இறப்புக்கான சரியான காரணத்தை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். மது அருந்தியதால் இந்த சம்பவம் நடந்ததாக குடும்ப உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர். இது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்," என்றார். 

முன்னதாக நாலந்தா ஹூச் பகுதியில் கடந்த வாரம் போலி மதுபானம் குடித்த 11 பேர் பலியான நிலையில் தற்போது மேலும் 5 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.