இந்தியா

உலகின் பிரபலமான தலைவர் யார்? கருத்துக்கணிப்பு கூறுவது இவரைத்தான்

DIN

உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில், 71 சதவிகிதத்தினரின் ஆதரவை பெற்று பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். 13 உலக தலைவர்கள் அடங்கிய பட்டியலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 43 சதவிகிதத்தினரின் ஆதரவை பெற்று ஆறாவது இடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் 43 சதவிகிதத்தினரின் ஆதரவை பெற்றுள்ளார்.

இதையடுத்து, 41 சதவிகிதம் பேர், ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, 2021ஆம் நவம்பர் மாதம் எடுத்த கருத்துக்கணிப்பிலும் பிரதமர் மோடியே முதலிடம் பெற்றிருந்தார்.

ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்க ஆகிய நாட்டு தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு உள்ளது என்பது குறித்து மார்னிங் கன்சல்டன்ட் பொலிடிக்கல் இன்டெலிஜன்ஸ் என்ற இணையதளம் கருத்துக்கணிப்பு நடத்திவருகிறது.

இதுகுறித்து இணையதளத்தில் வெளியிட்ட குறிப்பில், "சமீபத்திய ஒப்புதல் மதிப்பீடுகள் ஜனவரி 13-19, 2022 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வயது வந்தோரிடம், ஏழு நாள்களுக்கு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன் சராசரியை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வளவு பேரிடம் கருத்துக்கணிப்பு எடுத்தோம் என்பது நாட்டுக்கு நாடு மாறுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம், 84 சதவிகிதத்தினரின் ஆதரவை பெற்ற பிரதமர் மோடிக்கு இந்த இணையதளம் முதலிடம் வழங்கியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT