முகப்பு
இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியன் பகுதியில் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 4:36 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியன் பகுதியில் பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தின் கில்பல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் தீவிரவாதி பதுங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டு பின் தாக்குதல் நடத்தப்பட்டதில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

முன்னதாக , கடந்த ஜன.15 ஆம் தேதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.