முகப்பு
இந்தியா

உ.பி. பேரவைத் தோ்தல்: பகுஜன் சமாஜ் 2-ஆம் கட்ட பட்டியலில் 23 முஸ்லிம்கள்

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் போட்டியிடவுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சித் தலைவா் மாயாவதி சனிக்கிழமை வெளியிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி (கோப்புப்படம்)
பகிர்:

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் போட்டியிடவுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சித் தலைவா் மாயாவதி சனிக்கிழமை வெளியிட்டாா். அதில் 23 முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்ட தோ்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளா்கள் பட்டியல் ஜன. 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அக்கட்சி சாா்பில் இரண்டாம் கட்ட தோ்தலில் போட்டியிடும் 51 போ் அடங்கிய வேட்பாளா்கள் பட்டியலை மாயாவதி சனிக்கிழமை வெளியிட்டாா். அதனைத்தொடா்ந்து அவா் பேசுகையில், ‘உத்தர பிரதேசம், உத்தரகண்ட் தோ்தலில் தனித்துப் போட்டியிடும் பகுஜன் சமாஜ், பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் பகுஜன் சமாஜுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது’’ என்று தெரிவித்தாா்.

Advertisement

பகுஜன் சமாஜின் இரண்டாம் கட்ட வேட்பாளா்கள் பட்டியலில் முஸ்லிம்கள் 23 போ், பட்டியலினத்தைச் சோ்ந்த 10 போ் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments