முகப்பு
இந்தியா

சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை கைது செய்யலாம்: அரவிந்த் கேஜரிவால்

​தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை கைது செய்யவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை கைது செய்யவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி காணொலி வாயிலான செய்தியாளர்கள் சந்திப்பில் கேஜரிவால் மேலும் கூறியதாவது:

"வரும் நாள்களில் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை கைது செய்யவுள்ளதாக எங்களுக்குத் தெரிந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அவருக்கு எதிராக மத்திய அரசு இரண்டு முறை சோதனை நடத்தியது. ஆனால், அவை வீணாகிவிட்டன. இந்த முறையும் அவர்களை வரவேற்கிறோம்.

தேர்தல் நெருங்குவதால், மத்திய விசாரணை அமைப்புகள் செயல்படத் தொடங்கியுள்ளன. அனைத்து அமைப்புகளையும் பாஜக அனுப்பட்டும். சத்யேந்தர் ஜெயின் இடங்களுக்கு மட்டுமல்ல, மணீஷ் சிசோடியா, பகவந்த் மான் ஆகியோர் இடங்களுக்கும் அனுப்பட்டும். அவர்களை நாங்கள் புன்னகையுடன் வரவேற்போம்.

நாங்கள் பஞ்சாப் முதல்வரைப்போல அழ மாட்டோம். அவர் தவறு செய்துள்ளதால் விரக்தியில் இருக்கிறார். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே, நாங்கள் பயப்பட மாட்டோம்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →