இந்தியா

நாட்டில் புதிதாக 3.33 லட்சம் பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,33,533 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய (சனிக்கிழமை) தினத்தைக் காட்டிலும் 4,171 பாதிப்புகள் குறைவு.

மேலும் 525 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 2,59,168 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,65,60,050 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,89,409 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 21,87,205 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

காலை 7 மணி நிலவரப்படி நாட்டில் இதுவரை மொத்தம் 1,61,92,84,270 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT