இந்தியா

2047-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியா: நேதாஜி சிலை திறப்பு விழாவில் மோடி பேச்சு

DIN


2047-ஆம் ஆண்டு நாட்டின் 100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்குள், புதிய இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நேதாஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி தில்லியிலுள்ள இந்தியா கேட் பகுதியில் அவருக்கு முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

பின்னர், பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பை அளித்த வீரர்களுக்கு 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விருதை பிரதமர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு தேசிய பேரிடர் மீட்புப் படையை வலுப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மீட்புப் படை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையின் பணிகளை சர்வதேச அமைப்புகள் பாராட்டி வருகின்றன.

பேரிடர் மீட்புப் படையினருக்கு வானியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் உள்பட மற்ற பயிற்சிகளையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பேசிய அவர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிபணிய மறுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியர்களிடையே விடுதலைக்கான தன்னம்பிக்கையை வளர்த்தவர். மக்களிடையே எழுச்சியையூட்டி நாட்டுக்கான சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT