மம்தா பானர்ஜி (கோப்புப் படம்) 
இந்தியா

நேதாஜிக்கு சிலை வைக்காதது ஏன்?: பிரதமருக்கு மம்தா கேள்வி

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவில் நீடிக்கும் மர்மம் தொடர்பான விவகாரத்தில் உண்மையை கண்டறிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

DIN

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைவில் நீடிக்கும் மர்மம் தொடர்பான விவகாரத்தில் உண்மையை கண்டறிய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால், நேதாஜி மறைவில் உள்ள மர்மம் தொடர்பான உண்மையை கண்டறிய முயற்சிகள் எடுக்கப்படும் என்று தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் கிடப்பிலேயே உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். 

பின்னர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், நேதாஜி மறைவில் உள்ள உண்மையை பாஜக அரசு ஆட்சிக்கு வந்தால் கண்டறியும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். ஆனால் இன்று வரை நேதாஜியின் இறப்பு மர்மமாகவே உள்ளது.    

அவரது மர்மம் தொடர்பான கோப்புகளை எடுத்துக்கூட பார்க்காதது ஏன்?. நாங்கள் நேதாஜி மரணம் தொடர்பான கோப்புகளை வகைப்படுத்தி வெளியிட்டோம்.

1945-ஆம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. ஜப்பானில் நேதாஜியின் சாம்பல் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். சுதந்திர போராட்ட வீரர் என்ற அடிப்படையில் அது குறித்து டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நேதாஜிக்கு சிலை வைக்கப்படும் என்று பாஜக வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை  என்று விமர்சித்தார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT