இந்தியா

ஹரீஷ் ராவத் ராம்நகரில் போட்டி: உத்தரகண்ட் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

DIN


உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 11 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

உத்தரகண்ட் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 53 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் ராம்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஹரீஷ் ராவத் மருமகள் அனுக்ரிதி குசைன் ராவத் லேன்ஸ்டௌன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதன்மூலம், காங்கிரஸ் இதுவரை 64 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளது.

ஹரக் சிங் ராவத் குறித்து கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT