காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் நாளை பொற்கோயிலில் ராகுல் வழிபாடு
பஞ்சாப் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்கள் 117 பேருடன் பொற்கோயிலில் ராகுல் காந்தி எம்.பி. வியாழக்கிழமை (ஜன. 27) வழிபாடு நடத்தவுள்ளாா்.
பஞ்சாப் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்கள் 117 பேருடன் பொற்கோயிலில் ராகுல் காந்தி எம்.பி. வியாழக்கிழமை (ஜன. 27) வழிபாடு நடத்தவுள்ளாா்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சாா்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 86 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் விரைவில் அறிவிக்கப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், தில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை அமிருதசரஸ் வரும் ராகுல் காந்தி, காங்கிரஸ் வேட்பாளா்கள் 117 பேருடன் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தவுள்ளாா் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலையில் ஜலந்தா் செல்லும் ராகுல் காந்தி, காணொலி முறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.