முகப்பு
இந்தியா

பஞ்சாப் தேர்தல்: கேஜரிவால் 3 நாள் சுற்றுப்பயணம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வருகிற ஜனவரி 28 முதல் 30 ஆம் தேதி வரை பஞ்சாபில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வருகிற ஜனவரி 28 முதல் 30 ஆம் தேதி வரை பஞ்சாபில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 8-ம் தேதி வெளியிட்டது. 

அதன்படி, பஞ்சாபில் பிப்ரவரி 20-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி இருந்து வரும் நிலையில், ஆட்சியைப் பிடிக்க பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 

இந்நிலையில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் வருகிற ஜனவரி 28 முதல் 30 ஆம் தேதி வரை பஞ்சாபில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

பஞ்சாபில் ஜலந்தர், அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →