இந்தியா

குறையும் கரோனா: நாட்டில் புதிதாக 2.51 லட்சம் பேர் பாதிப்பு

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,51,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 627 பேர் உயிரிழந்தனர்.

நேற்று 2,86,384 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய விவரங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.28) வெளியிட்டது. அதில் ஒரு நாளில் மட்டும் 2,51,209 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,06,22,709-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 627 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,94,327ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3,47,443 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 21,05,611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 15.88 சதவிகிதமாக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.18 சதவிகிதமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT