முகப்பு
இந்தியா

கரோனாவிலிருந்து மீண்ட பாடகி லதா மங்கேஷ்கர்

பாடகி லதா மங்கேஷ்கர் கரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
கோப்புப்படம்
பகிர்:

பாடகி லதா மங்கேஷ்கர் கரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மும்பை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியதாவது, "பாடகி லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பரிதித் சம்தானியுடன் பேசினேன். 

அவர் குணமடைந்து வருகிறார். சில நாட்களாக வென்டிலேட்டரில் இருந்த அவர் தற்போது நலமாக உள்ளார். சிகிச்சைக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கிறார். கரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்தும் அவர் குணமடைந்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.