பெங்களூருவில் மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய போக்குவரத்து காவல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் கடந்த 24ஆம் தேதி நோ பார்க்கிங் பகுதியில் இருந்த காரை இழுத்துச் செல்ல முயன்றபோது மாற்றுத்திறனாளி பெண் மஞ்சுளாவுக்கும் போக்குவரத்து ஏஎஸ்ஐ நாராயணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிக்க- உத்தரகண்ட்: மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா பாஜக?
அப்போது ஏஎஸ்ஐ நாராயணனை கற்களை கொண்டு மாற்றுத்திறனாளி பெண் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து அதிகாரி அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான விடியோ இணைய தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய போக்குவரத்து காவல் அதிகாரி நாராயணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் இச்சம்பவம் தொடர்பாக மாற்றுத்திறனாளி பெண் மஞ்சுளாவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.