முகப்பு
இந்தியா

கான்பூரில் பேருந்து மோதியதில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டட் மின் சந்திப்பில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மின்சார பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 5 பேர் பலியாகினர்.

Updated On : 31 ஜனவரி, 2022 at 6:24 PM
கான்பூரில் நின்றிருந்தவர்கள் மீது மோதிய பேருந்து; 5 பேர் பலி
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:46 PM


கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் டட் மின் சந்திப்பில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மின்சார பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 5 பேர் பலியாகினர்.

மூன்று கார்கள், ஏராளமான பைக்களும், பேருந்து விபத்தில் சேதமடைந்தன. பேருந்தின் ஓட்டுநர் விபத்து நிகழ்ந்தவிடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணி நடந்து வருவதாக காவல்துறை துணை ஆணையர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க.. தங்க நகைகள் புதிது போல ஜெலிக்க..

Advertisement

இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.