இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 959 பேர் பலி
இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 959 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 959 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,09,918 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 18,31,268 ஆக உள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 959 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,95,050 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,62,628 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,89,76,122 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதையும் படிக்க- பள்ளிகளில் ஜாதி அடையாளம் ஒழிக்கப்படுமா?
கடந்த 24 மணிநேரத்தில் 28,90,986 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 166 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 13,31,198 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 72.89 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.