காங். மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

பட்ஜெட் தொடரில் பெகாசஸ் பிரச்னையை எழுப்புவோம்: மல்லிகார்ஜுன கார்கே

பட்ஜெட் கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரத்தை எழுப்புவோம் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்தார்.

DIN

பட்ஜெட் கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரத்தை எழுப்புவோம் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்தார்.

நாட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாளை காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே இன்று காலை செய்தியாளர்களிடம் பேசுகையில்,

புதிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனைவரும் தயாராக உள்ளோம். ஆனால், பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்னை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அந்த சமயத்தில் குரலெழுப்புவோம்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடர் பெகாசஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டது. நாடாளுமன்றம் செயல்படவிடாமல் எதிர்க்கட்சிகள் பிரச்னை செய்வதாக ஆளும்கட்சி குற்றம்சாட்டியது. ஆனால், தற்போது உண்மை வெளிவந்துவிட்டது. இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT