இந்தியா

மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் இந்திய கடற்படையில் இணைப்பு

DIN

மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ஐஎன்ஏஎஸ்-324 கடற்படையில் இன்று இணைக்கப்பட்டது. 

விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் தேகா போர்க்கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை கிழக்கு மண்டல வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா தலைமை தாங்கினார். இந்த ஹெலிகாப்டரில் நவீன கண்காணிப்பு ரேடார் உள்ளிட்ட நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. அத்துடன் மனிதநேய உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றையும் மேற்கொள்ளும் வகையில் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதி இதில் உள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT