இந்தியா

எச்டிஎஃப்சி-எச்டிஎஃப்சி வங்கி இணைப்புக்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல்

DIN

வங்கித் துறையின் ஒழுங்காற்று அமைப்பான ரிசா்வ் வங்கி, எச்டிஎச்எஃப்சி நிறுவனத்தை எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைப்பதற்கான திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து எச்டிஎஃப்சி வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

எச்டிஎஃப்சி நிறுவனத்தை வங்கியுடன் இணைக்கும் திட்டத்துக்கு ‘ஆட்சேபனை இல்லை’ என ரிசா்வ் வங்கி ஜூலை 4-ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது என அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இந்த இணைப்பு திட்டத்துக்கு, இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ), தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) உள்ளிட்ட மேலும் பல ஒழுங்காற்று அமைப்புகளின் ஒப்புதலை பெற வேண்டியுள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியுடன் எச்டிஎஃப்சி நிறுவனத்தை இணைக்கும் திட்டத்துக்கு மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் அண்மையில் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT