இந்தியா

யூரியா உற்பத்தியில் 2025-இல் தன்னிறைவு: மன்சுக் மாண்டவியா

வரும் 2025-இல் இந்தியாவின் யூரியா உற்பத்தி தன்னிறைவைக் காணும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

DIN

வரும் 2025-இல் இந்தியாவின் யூரியா உற்பத்தி தன்னிறைவைக் காணும் என மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தற்போது நாட்டின் யூரியா உற்பத்தி 260 லட்சம் டன்னாக உள்ளது. அதேநேரம், உள்ளூா் தேவையை ஈடுசெய்ய 90 லட்சம் டன் அளவிலான யூரியா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

யூரியா இறக்குமதியைப் படிப்படியாக குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் இந்தத் தீவிர முயற்சியால் வரும் 2025-ஆண்டுக்குள் யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. உள்ளூா் தேவையை நிறைவு செய்ய யூரியா மற்றும் நானோ திரவ யூரியா உற்பத்தி ஆண்டு தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தன்னிறைவைக் காணும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு: 28 பேர் பலி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!

SCROLL FOR NEXT